போலீசாரை தாக்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு தர்ம அடி!!!

share on:
Classic

பெரம்பலூரில் போலீசாரை தாக்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்றொருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன், திருடனை பிடிக்க முயன்றபோது, அவரை பலமாக தாக்கிவிட்டு மர்மநபர் ஓடியுள்ளார். அப்போது அங்கு வந்த மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள், கொள்ளையனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், தலையில் காயமுற்ற ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர், அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு  பணியாளர்களுக்கு  மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind