தலைக்கு ’ஹேர் டை’ அடிப்பவர்களின் கவனத்திற்கு..!!

share on:
Classic

ஹேர் டை பயன்படுத்துவது அனைவருக்கும் ஒத்துப்போகும் என்றும் சொல்ல முடியாது. இந்த ரசாயன சாயங்களை அடிப்பதனால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முன்பெல்லாம் வயது முதியவர்கள் மட்டும் தான் நரைமுடியை கருமையாக்க டை அடிப்பார்கள். தற்போது வயது வித்தியாசமின்றி அனைவரும் இளநரை காரனமாக டை அடித்துக்கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல், முடி கருமையாக இருப்போர்களும் ஸ்டைலாக இருக்கவும், இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ட்ரெண்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஹைலைட்ஸ், ப்ரவுன், ஃபெம், பர்கண்டி என பல பெயரில் கலரிங் செய்து கொள்கின்றனர்.

டையில் இருக்கும் அபாயமான ரசாயனம் என்ன..?
இவ்வாறு தலையில் ரசாயன சாயங்களை அடித்துக் கொள்வதனால், நமக்கு பல உபாதைகள் ஏற்படுகிறது. டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி (paraphenylenediamine) சேர்க்கப்பட்டிருக்கும். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் பல ஆபத்துக்கள் நேரிடும்.

டையில் இருக்கும் ரசாயனத்தல் ஏற்படும் ஆபத்துக்கள்...
நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் அதிகமாக உண்டு.

இந்த ரசாயனத் தயாரிப்புகளை ஸ்கால்ப்பில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்பிணி பெண்கள் சுவாசித்தால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும். விலை மலிவாக இருக்கிறது என்று, சில தரமற்ற ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்ததாக கூறப்படுகிறது.

ஹென்னா செய்வது எப்படி..?
வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பொடி, நெல்லிக்காய் பொடி, பீட்ரூட் சாறு, எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் தலையில் தடவலாம். இவ்வாறு செய்தால், தலைமுடி மென்மையாகவும் அழகாகவும் கருமையாகவும் இருக்கும்.

 

News Counter: 
100
Loading...

Ramya