தெறிக்க விட்ட வார்னர்..! கருணையில்லா வருண பகவான்..!

share on:
Classic

 நாட்டிங்ஹாம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்தம். 

 நாட்டிங்ஹாம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் , பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

 
தொடக்கம் முதல் பின்ச் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் எதிர் முனையில் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் பின்ச் 53 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த கவாஜாவுடன் இணைந்து சத்தமில்லாமல் தனது சதத்தை நிறைவு செய்தார் அதிரடி வீரர் வார்னர்.  நடப்பு உலகக்கோப்பையில் வார்னரின் இரண்டாவது சதம் இதுவாகும்.

 

166 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் தனது இன்னிங்ஸை நிறைவு செய்ய, பின்னர் வந்த மேக்ஸ்வெல் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் செய்ய பட்டு வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில், 49 ஓவர் முடிவடைந்த நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது, ஸ்டோயின்க்ஸ் 6 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

News Counter: 
100
Loading...

Saravanan