WC19 : ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா பங்களாதேஷ்..!

share on:
Classic

உலகக்கோப்பை நாளை நடைபெறும் லீக் ஆட்டததில் ஆஸ்திரேலியா அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன் இரு அணிகளும் 3 உலகக்கோப்பை போட்டியில் மோதியுள்ளன. அதில் 2-ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி சதவிகிதம் அதிகமாக உள்ளது.

உலகக் கோப்பை : நாளை நடக்க உள்ள லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, பங்களாதேஷ் அணியை ட்ரெண்ட் பிரிட்ஜில் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. நடந்து வரும் லீக் ஆட்டங்களில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியும் இதுவரை நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடியுள்ளது. பங்களாதேஷைப் பொறுத்தவரை, ஷாகிப் அல் ஹசன் இந்த லீக் போட்டியில் இரண்டு சதங்களை அடித்து நல்ல பாமில் உள்ளார். 

ஆஸ்திரேலியா தனது முதல் 3 போட்டிகளில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவை பயன்படுத்தி, அவற்றில் 2 போட்டியில் வெற்றி பெற்றது, ஆனால் கடந்த 2 போட்டிகளில் அவர்கள் எந்த ஸ்பின்னரையும் பயன்படுத்தவில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் பகுதி நேர வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லை தங்கள் முக்கிய சுழற்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தினர், ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லியோன் இன்னும் போட்டிகளில் களமிறக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது ”ஆஸ்திரேலிய அணி பங்களாதேஷ் வீரர் ஷகீப்பை குறைந்த ரன்க்ளில் வெளியேற்ற ஒரு புதிய யுக்தியை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஷாகிப் அல் ஹசன் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார்” என செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த போட்டி குறித்த பேசிய  ஷாகிப்  "கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளோம். மேலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடம் விளையாடியதால் 140, 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாகவே ஆடியுள்ளோம்” என ஷாகிப் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி : ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி (வார), நாதன் கூல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லியோன், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் சம்பா.

பங்களாதேஷ்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், சௌமியா சர்க்கார், தமீம் இக்பால், முகமது சைஃபுதீன், மொசாடெக் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், முஸ்தாபிசூர் ரஹ்மான், ரூபல் ஹொசைன், சப்பீர் ரஹ்மான், அபு ஜெய்ட், மஹித்ஹத்.
 

News Counter: 
100
Loading...

Saravanan