ஆஸ்திரேலியாவில் ஆபத்தாக மாறிய ஜெல்லி மீன்கள்..!

share on:
Classic

ஆஸ்திரேலியாவில் ஜெல்லி மீன்களால் 3,500 பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கிலிருந்து பலத்த காற்று வீசியதன் காரணமாக குயின்ஸ்லாந்தில் கடற்கரை பகுதிகளை நோக்கி, 15 (cm) சென்டி மீட்டர் நீளமுடைய புளூபாட்டில் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன.  இதுகடித்தால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் மிகுந்த வலியை ஏற்படுத்தும். கடந்த வாரத்தில் மட்டும் இந்த ஜெல்லி மீன்கள் கடித்து 2,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் கூடுதல் மீன்கள் கரையை நோக்கி வரும் என்பதால்,கோல்ட் கோஸ்ட் (Gold Coast), சன்ஷைன் கோஸ்ட் (Sunshine Coast) வட்டாரங்களில் உள்ள கடற்கரைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி அனைவருக்கும் தொல்லையை ஏற்படுத்திய ஜெல்லி மீன்களின் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.

 

ஜெல்லி மீன்(Jelly Fish) :

சொறிமுட்டை என தமிழில் அழைக்கப்படும் ஜெல்லிமீன் (Jellyfish) என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினமாகும்.கடல் உயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான உயிரினம்  தான் இந்த ஜெல்லி மீன்கள் (Jelly Fish)

குழியுடலிகள் என்பவை :

குழியுடலிகள் என்பவை உடலின் மத்தியில் நீண்ட குழல் போன்ற பகுதியையும், ஆரச் சமச்சீருடைய உடலையும் கொண்ட பல்லுயிரணு உயிரிகள் ஆகும். ஹைட்ரா, ஒபீலியா, ஜெல்லி மீன்கள், அனிமோன்கள் ஆகியவை குழியுடலிகள் ஆகும். குழியுடலிகள் பெரும்பாலும் இருக்கை நிலையிலேயே வாழ்கின்றன.
 

ஜெல்லி மீன்கள் வாழிடம் : 

 கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகான உயிரினமாகவும், கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும்போது மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன.ஜெல்லி மீன்கள் கடலின் ஆழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலாத அளவுக்குப் பரந்த நீர்நிலைகளில் காணப்படுகின்றன.

 

நச்சுத்தன்மை : 

ஜெல்லிமீன்களின் மீது பொருள் ஏதேனும் பட்டவுடன் அவை கொத்துகின்றன . இது மனிதர்களை கொத்தும்போழுது மனிதர்களுக்கு சில ஊறுகளையும், வலியையும் ஏற்படுத்துகிறது . அதிலும் கடற்சாட்டை (Sea whip) வகையான ஜெல்லி மீன்கள் மனிதர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச் செய்து, மரணத்தையம் ஏற்படுத்துகிறது .சில ஜெல்லி மீன்களின் நஞ்சு மனிதனை முப்பது நொடிகளுக்குள் கொல்லக்கூடியது. இதனால் ஆஸ்திரேலியா நாட்டுக் கடற்படையினர் கடலில் செல்லும்போது ஜெல்லி மீன்கள்  ஊடுருவ முடியாத சிறப்புவகை நெகிழி உடைகளை அணிந்து கொள்கின்றனர்.

 

 

ஜெல்லி மீன்களினால் ஏற்படும் விளைவுகள் : 

ஜெல்லி மீன்களின் பெருக்கம் அதிகமானால் மீன்பிடி தொழிலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மீன் பிடி தொழில் நஷ்டத்திற்கு உள்ளாகும்.மற்றும் கடலில் வாழும் பிற உயிரினங்களுக்கு உணவு கிடைக்காமல் அனைத்து உணவையும் இவையே உட்கொள்ளும் ஆபத்து ஏற்படும்.கடற்கரை பகுதிகளில் குளிக்க செல்பவர்கள் இதன் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.இதனால் கடல் சார்ந்த வேலைகள் அனைத்தும் பாதிப்படையும்.குறிப்பாக சுற்றுலா துறை வீழ்ச்சி அடையும். 

 

ஜெல்லி மீன்களின் பெருக்கத்திற்கு காரணம் : 

சமீப காலமாக , நாம் மிகக் கூடிய அளவில் மீன் பிடிப்பதும், கடற்பரப்பில்  புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு ,உரக்கழிவில் இருந்துப் பெறப்படும் ஊட்டமும் தான் ஜெல்லி மீன்களின் பெருக்கத்திற்கு காரணம் என ஆஸ்திரேலிய அறிஞரான அந்தோனி ரிச்சார்ட்சன் தெரிவித்துள்ளார்.

எனவே,அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த ஜெல்லி மீன்கள்,எனவே., ஜெல்லி மீன்களுக்கு ஊட்டமளிக்கும் சாக்கடை கழிவுகள்,உரக்கழிவுகள் போன்றவற்றை கடலில் கலப்பதை குறைப்போம்.நாட்டின் மீன்வளத்துறை,சுற்றுலாத்துறை மேம்பட உதவுவோம்.

 

 

News Counter: 
100
Loading...

youtube