கெய்லுக்கு 1.5 கோடி இழப்பீடு...ஆஸி., கோர்ட் அதிரடி தீர்ப்பு..! எதற்கு தெரியுமா..?

share on:
Classic

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்  க்ரிஸ் கெய்லுக்கு 1.5 கோடி ரூபாய் இழப்பீடாக ஃபேர்ஃபாக்ஸ் மீடியா நிறுவனம்  வழங்க ஆஸ்திரேலியா கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

ஃபேர்ஃபாக்ஸ் ஊடக செய்தி

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை  ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாட்டில் நடைப்பெற்றது. அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் க்ரிஸ் கெய்ல்,  ஹோட்டலில் மசாஜ் தெரபிஸ்ட் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக, ஆஸ்திரேலியாவின் ஃபேர்ஃபாக்ஸ் ஊடகம்  செய்தியை வெளியிட்டது.

 

குற்றச்சட்டை மறுத்த கெய்ல்

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தும், இதற்கான நஷ்ட ஈட்டையும் பெற்று தர வேண்டும் எனவும் கெய்ல் ஆஸ்திரேலியாவின் சவுத் வேல் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில்  குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அந்த ஊடகம் சமர்ப்பிக்காததினால் கெயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு ஃபேர்ஃபாக்ஸ் ஊடகம் 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ஆஸ்திரேலிய கோர்ட் உத்தரவிட்டது.

 

 

News Counter: 
100
Loading...

aravind