உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி..!

share on:
Classic

1975 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் 5 முறை கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் 1975-ஆம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதிக முறை உலகக்கோப்பை வென்ற நாடுகள் பட்டியளில் ஆஸ்திரேலியா ஐந்து முறை வென்று முதல் இடத்தில் உள்ளது. முதன் முறையாக 1987-ஆம் ஆண்டு ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெற்றது. அதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 1999 முதல் 2007 வரை தொடர்ந்து மூன்று உலகக்கோப்பை வென்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணியையே சாரும். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 1975 மற்றும் 1996 ஆம் அண்டுகளில் இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.....        

News Counter: 
100
Loading...

Saravanan