முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்..

share on:
Classic

அடிலெய்டு முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களின் பந்துவீச்சை  நிதானமாக எதிர்கொண்டு ஆஸ்திரேலிய அணி ரன் சேர்த்து வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் சேர்த்தது. 

அதிபட்சமாக புஜாரா 123 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணி, கூடுதலாக ரன் எதுவும் சேர்க்காமல் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து ஆல்அவுட் ஆனது. 

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச், ரன் எதுவும் எடுக்காமல் இசாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய ஹாரீஸ் 26 ரன்களிலும், கவாஜா 28 ரன்களிலும், மார்ஷ் 2 ரன்களிலும் அஸ்வின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த ஹேண்ட்ஸ்கோம்ப் - ஹீட் இணை நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind