358 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

share on:
Classic

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், மொஹாலியில் நடைபெற்ற 4-வது போட்டியில், டாஸ்வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிகர் தவான் 143 ரன்குவித்தார். ரோஹித் சர்மா 95 ரன்கள் சேர்த்தார். இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47 புள்ளி 5 ஓவரில் 359 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஹான்ட்ஸ்காம்ப் 117 ரன்கள் குவித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan