உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!!

share on:
Classic

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றதன் முலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.

உலகக்கோப்பையை வெல்வதற்கு அனைத்து நாடுகளும் முழு முனைப்போடு பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.வரும் 30ஆம் தேதி உலகக்கோப்பை தொடங்க இருக்கின்ற நிலையில் நேற்று ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்ரீலங்கா  மற்றும் ஆஸ்திரேலிய ஆணிகள் மோதின.இதில் டாஸை கைப்பற்றிய ஸ்ரீலங்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதில் நிர்ணயிக்க பட்ட 5௦ ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது, அணியில் லஹுரு திருமன்னே மற்றும் தஞ்சன் ஜெயா டி சில்வா இருவர் மட்டும் 56,43  வீதம் ரன்கள் எடுத்து தங்கள் அணியின் ஸ்கோரை உயரத்தினர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்க வில்லை.

பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். அவருடன் தொடக்க வீரராக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா மட்டும் நீடித்து ஆடி 105  பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.இதன் முலம் தான் பங்கு பெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பெற்றது குறிப்பிடதக்கது   

News Counter: 
100
Loading...

Ramya