உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

share on:
Classic

வார்னரின் சதத்தால் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி அணி வெற்றி    

உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 308 என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின்ச், வார்னர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்ச் 82 ரன்களில் வெளியேற வார்னர் சதம் விளாசினார், அவர் 107 ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து, 2 மெய்டின் ஓவர்களுடன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.   

பாகிஸ்தான் அணி 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் கண்டது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் பகர் ஜமான் டக் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார், அணியில் அதிக பட்சமாக இமாம்-உல்-ஹக் 53 ரன்கள் சேர்த்தார், 45.4 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

News Counter: 
100
Loading...

Saravanan