பிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..!

share on:
Classic

பிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே பிஞ்ச் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில், வார்னர் 26 ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் உடன் இணைந்து தனது சதத்தை நிறைவு செய்த பிஞ்ச், 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உதனா வீசிய பந்தில், கருணாரத்னவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்நிலையில், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொக்க வீரர்களான, கருணரத்னேவும், குசல் பெரெராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து, களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 97 ரன்களும், குசல் பெரெரா 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Saravanan