"உச்சத்தில் இருக்கும் போது தான் சரிவு வரும்" - கோலியை எச்சரித்த ஆஸ்திரேலியா பயிற்சியாளர்

share on:
Classic

டெஸ்ட் தொடரில் வென்ற இந்திய அணிக்கும், கோலிக்கும் "உச்சத்தில் இருக்கும் போது தான் சரிவு வரும்" என்று ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா 
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. இது ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் முதன் முறையாக அதனை எதிர்த்து இந்தியா கைப்பற்றியிருக்கும் முதல் வெற்றியாகும். இந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஊடககங்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

கோலியை எச்சரித்த பயிற்சியாளர் 
இந்திய அணி கேப்டன் கோலியை எச்சரித்த அவர் "2001ஆம் ஆண்டு இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா, 2004ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தியது. என் வாழ்க்கையிலேயே மிக முக்கிய தருணமான அது. அதே போல் இந்திய வீரர்களுக்கு முக்கியமாக விராட் கோலிக்கும் இப்போது இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் உச்சத்தில் இருக்கும் பொது மெதுவாக வீழ ஆரம்பிப்பீர்கள்” என்று எச்சரிக்கை தோனியில் கூறியுள்ளார் .  

புஜாரா புராணம் 
தொடர்ந்து பேசிய அவர் "தற்போது இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது ஆனால் நாங்கள் அது எல்லாவற்றையும் எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளோம். இந்திய அணியில் சிறந்த ஒரு நாள் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். எனினும் நிச்சயம் டெஸ்ட் தொடரை விட சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்" என்று கூறினார். மேலும் டெஸ்ட் தொடரில் சதமடித்த புஜாராவை புகழ்ந்து தள்ளிய லாங்கர் "நான் இதுவரை அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேனை பார்த்ததே இல்லை. சச்சின் டெண்டுல்கர்,டிராவிட்டை விட சிறப்பாக விளையாடுகிறார். விளையாட்டில் அவரது கவனம் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அவரை போல நானும் எங்கள் அணியும் தொடர்ந்து முன்னேறி சிறப்பாக விளையாடுவோம்" என்று கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind