WC19 : 308 ரன்கள் இலக்கு - பாகிஸ்தான் எட்டுமா..?

share on:
Classic

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 308 என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச், வார்னர் களமிறங்கினர். அவர்கள் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர்.

பின்ச் அமீர் ஓவரில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். வார்னர் 111 பந்துகளில் 107 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரும் அமைத்து கொடுத்த அடித்தளத்தை மற்ற வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றத்தை அளிததனர். பாகிஸ்தான் அணியில் அமீர் 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து, 2 மெய்டின் ஓவர்களுடன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

News Counter: 
100
Loading...

Saravanan