நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மகத்துவம் தெரியுமா..?

share on:
Classic

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்ற வாக்கியத்திற்கேற்ப, பூத்திருக்கும் ஆவாரையின் காற்று பட்டாலே ஆயூள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் இந்த தாவரத்தில் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்த்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் இதை முக்கிய உணவாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த ஆவாரம் பூவில் செனாபிக்ரின், கார்டியாக் குளுக்கோசைடு போன்ற வேதிப்பெருட்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள இன்சுலின் சுரக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் முற்றிலுமாக குணப்படுத்தபடுகிறது.

ஆவாரம் பூவின் பயன்கள்:

  • ஆவாரம் பூவை தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய், உடல் சோர்வு, நாவறட்சி, தாகம், தூக்கம் இன்மை, உடல் இளைப்பு தன்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை நீங்கும்.
  • ஆவாரம் பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
  • உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.
  • ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, கஷாயம் செய்து பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் முற்றிலும் குணமடையும்.

 

News Counter: 
100
Loading...

vinoth