முகமது ஷமியின் இடத்தை பிடித்த நவ்தீப் சைனி..

Classic

உடற்தகுதிச் சுற்றில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவருக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் வரும் 14ஆம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் முன்னதாக தேர்வாகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து, அவருக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டார். 

இவர், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் 8போட்டிகளில் 34விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். ஒரு காலத்தில் மிகவும் ஏழ்மையான சூழலில் விளையாடி வந்த இவர், கவும் கம்பீரின் உதவியால் டெல்லி மாநில அணிக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100

aravindh