'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் படக்காட்சிகள் லீக்..!!

share on:
Classic

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் படக் காட்சிகள் வலைதளத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸின் படங்களுக்கு  உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அப்படி கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பாதி கதையுடன் முடிந்து மார்வெல்ஸ் ரசிகர்களை ஏமாற்றிருந்தது. அந்த படத்தின் வில்லனான தானோஸ் உலகின் பாதி மக்களை அழித்துவிட்ட நிலையில், ‘அவெஞ்சர்ஸ் படங்களின் அடுத்த பாகமாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் உருவாகிருக்கு.  அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் தொடர்ச்சியாக சூப்பர் ஹீரோஸ் கூட்டணி எப்படி மீதமுள்ள மக்களை காப்பாற்றுகிறார்கள் என்ற கதைக்களத்துடன் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுக்க பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுருக்க அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின்  ப்ரொமோஷன் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும்  இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரொமோ விடியோக்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிக படுத்தி வரும் நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் முக்கியமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இது போன்ற காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று அவெஞ்சர்ஸ் பட பிரியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

`அயர்ன்மேன்', `தோர்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி படமாக வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ 
படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan