வெளியானது 'அவெஞ்சர்ஸ்-4' டிரெய்லர்...

Classic

'அவெஞ்சர்ஸ்-4' படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அயர்ன்மேன், ஹல்க், ஸ்பைடர்மேன், பிளாக்பேந்தர் உட்பட 'மார்வல்' சூப்பர்ஹீரோக்களின் ஒட்டுமொத்த பட்டாளத்தை உள்ளடக்கிய 'அவெஞ்சர்ஸ்' பட வரிசைக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அவெஞ்சர்ஸ் படத்தின் 3 பாகங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகி வசூல் சாதனை படைத்திருந்தன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவெஞ்சர்ஸ் படத்தின் 4ஆம் பாகமான 'எண்ட் கேம்' அடுத்தாண்டு ஏப்ரல் 26 அன்று அமெரிக்காவில் ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தானோஸை கொல்லப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்விக்கு இந்த படத்தில் விடை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர் ஹாலிவுட் ரசிகர்கள்....
 

News Counter: 
100
Loading...

mayakumar