டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் Avengers Endgame : அதிக பேசப்பட்ட கதாபாத்திரம் யார் தெரியுமா..?

share on:
Classic

டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படமாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த 26-ம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளில் மட்டுமல்ல, டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற பெயரில் 50 மில்லியன் டிவீட்கள் பதிவாகியுள்ளதாக படத்தின் இயக்குனர் என்று ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மற்றொரு நாளில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிவிட்டர் வரலாற்றிலேயே அதிகம் பேசப்பட்ட படமாக மாறும் என்று பதிவிடப்பட்டுள்ளது. 

டிவிட்டர் ஹேஷ்டாகில் அதிகம் பேசப்பட்ட கதாப்பாத்திரம் :

1.Thanos (Josh Brolin)
2.Thor (Chris Hemsworth)
3.Ironman (Robert Downey Jr)
4.Captain America (Chris Evans)
5.Hulk (Mark Ruffalo)
6.Loki (Tom Hiddleston)
7.Spider-Man (Tom Holland)
8.Black Widow (Scarlett Johansson)
9.Groot (Vin Diesel voice)
10.Nebula (Karen Gillan)

மேற்கூறிய நடிகர்கள் நடித்திருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகளவில் இப்படம் 160 கோடிக்கு வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் அவதார் படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Ramya