புதிய காட்சிகள், கூடுதல் ஆச்சரியங்களுடன் மீண்டும் வெளியாகிறது Avengers Endgame..!!

share on:
Classic

நீக்கப்பட்ட புதிய காட்சிகள் மற்றும் கூடுதல் ஆச்சர்யங்களுடன் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மீண்டும் வெளியாக உள்ளதை மார்வல் ஸ்டூடியோஸின் தலைவர் உறுதி செய்துள்ளார்.

2008-ல் ஐயர்ன் மேன் படத்துடன் தொடங்கிய மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸ்-ன் ஒட்டுமொத்த பயணத்தின் உச்சமாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் 2-வது இடத்தில் உள்ளது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும், அவதாரின் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் மார்வல் ஸ்டுடியோஸ்-ன் தலைவர் கெவின் ஃபெஜ் வரும் 28-ம் தேதி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அது நீண்டநேர காட்சியாக இருக்காது என்று கூறிய அவர், சில புதிய விஷயங்கள் படத்தின் கடைசியில் சேர்க்கப்பட்ட வெர்ஷன் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், சிறிய தியாகம் மற்றும் கூடுதல் ஆச்சர்யங்களுடன் படம் இருக்கும் எனவும் அவர் கூறினார். 

இந்த முயற்சி ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்க உதவியாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர். நேற்று வரைக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகளவில் 2.743 பில்லியன் டாலர் வசூலித்துள்ளது. ஆனால் அவதாரின் சாதனை 2.788 பில்லியன் டாலராக உள்ள நிலையில் அந்த சாதனையை முறியடிக்க இன்னும் 45 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.313 கோடி தேவைப்படுகிறது. இந்த மறு ரிலீஸ் மூலம் அவதாரின் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

News Counter: 
100
Loading...

Ramya