இரத்த அழுத்தத்தை போக்க சிறந்த வழிகள்..!!

share on:
Classic

இதயத்திலிருந்து இரத்தமானது உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த இரத்தமானது உடலிலிருந்து இதயத்திற்கும், இதயத்திலிருந்து உடலுக்கும் இரத்தமானது வெவ்வேறு வேகத்தில் எடுத்து செல்கிறது. இதுவே இரத்த அழுத்தமாகும். 

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகம், அட்ரீனஸ் சுரப்பிகள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இந்த இரத்த அழுத்தமானது சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள்:

 • உணவில் சோடியம் குளோரைடு நிறைந்த அதிக உப்புகளை சேர்த்துக் கொள்ளுதல்.
 • உடல் எடை அதிகமாக இருத்தல் 
 • உடற்பயிற்சியின்மை
 • கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது.
 • புகைப்பிடித்தல் மற்றும் மதுபழக்கம்
 • மன அழுத்தம், உறக்கமின்மை
 • மருத்துவர் ஆலோசனைகள் இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.

குறைந்த இரத்த அழுத்ததிற்கான காரணங்கள்:

 • இரத்த சோகை
 • வாந்தி பேதி போன்றவற்றால்
 • அதிக நேரம் வெயிலில் இருத்தல் போன்ற காரணங்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தை போக்க சிறந்த வழிகள்:

 • உடலுக்கு தேவையான நார் சத்து நிறைந்த உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல்.
 • காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளுதல்.
 • உடற் பயிற்சி செய்தல், அதிக தண்ணீர் குடித்தல். குளிர்ந்த நீரை அதிகம் உட்கொள்வதை தவிர்த்தல் போன்றவற்றால் இரத்த அழுத்தத்தை போக்க முடியும்.  
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan