அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்களை தவிர்க்க பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..?

share on:
Classic

சர்ச்சைகளை தவிர்க்க மத்திய அமைச்சர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க அமைச்சர்கள் பேசும் முன்பும், டிவிட்டரில் கருத்து பதிவிடும் முன்பும் நன்கு யோசித்து, கவனமாக பேச வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் தங்களுக்கான பணிகளை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும் எனவும், தங்கள் வேலையை நவீன முறையில் மாற்ற வேண்டும் என்றும் பிரதமர்  மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது. நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கென்று ஒருங்கிணைந்த ப்ரோக்ராம்களை கணினியில் பதிவு செய்திருக்க வேண்டும் என கூறியுள்ள மோடி, இதன் மூலம் அமைச்சர்கள் எளிதில் தங்கள் துறையின் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள உதவும் என்று தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு திட்டம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து, அதற்கான வேலைகளை முன் கூட்டியே செய்த பிறகே அதுகுறித்த புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் மோடி கூறியதாக மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் இலக்குகளை எட்ட அனைத்து அமைச்சர்களும் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் மோடி அறிவுரை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

Ramya