காலை உணவு தவிர்ப்பதால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

share on:
Classic

காலை உணவு சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் உள்ள கலோரிகள் குறைந்து 2-ம் வகை நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அவசர கதியில் காலை உணவை பலரும் மறந்து விடுகின்றனர். இது போன்று நாம் செய்யும் சிறு தவறுகளால் இந்த நோய்கள் ஏற்படுகிறது. 

இது தொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் படி குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 4 நாட்கள் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் 2-ம் வகை நீரிழிவு நோய் வருவதற்கு 55% வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை உணவை தவிர்ப்பதால் உடலில் இன்சுலின் குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால்  நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

அதே போல் பல்வேறு காரணங்களுக்காக 30% மக்கள் காலை உணவை தவிர்க்கின்றனர் எனவும் காலை உணவு என்பது அன்றைய நாளின் முக்கிய உணவாகவும் நமது உடலிற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

காலை உணவை எடுத்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் உடலுக்கு சத்தான கொழுப்பு குறைந்த உணவுகள், பழவகைகள் அதிகம் எடுத்து கொள்வது நல்லது. இதனால் உடலுக்கு தேவையான இன்சுலின் சுறக்கப்பட்டு நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது. இப்போதெல்லாம் காலை உணவை தவிர்ப்பது பெரியவர்களை விட இளைஞர்களே அதிகம் என பாதிக்கப்படுகின்றனர்.

எனவே காலையில் உணவு எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan