அயனாவரம் சிறுமி பாலியில் வன்கொடுமை வழக்கில் 16 பேருக்கு வழங்கப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து

Classic

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள் உட்பட 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலோசனைக்குழு உரிய நேரத்தில் விசாரணை நடத்ததால் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.

தற்போது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறையில் உள்ள 16 பேருக்கும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது

News Counter: 
100
Loading...

aravind