அயோத்தி வழக்கு : மத்தியஸ்த்தரை நியமிப்பது குறித்து நாளை தீர்ப்பு..!!

share on:
Classic

அயோத்தி வழக்கில் மத்தியஸ்த்தரை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பும், முஸ்லீம் அமைப்புகள் மத்தியஸ்த்தரை நியமிக்க ஆதரவும் தெரிவித்திருந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan