‘அயோக்யா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு..!!

share on:
Classic

ஜீனியர் என்டிஆர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் "டெம்பர்" படம், ‘சிம்பா’ என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டதது.

இதை தொடர்ந்து,‘டெம்பர்’ படத்தின் கதை, தமிழில் விஷால் நடிப்பில் "அயோக்யா" என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இதில் விஷால் ஜோடியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார். பார்த்திபன் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தை வெங்கட் மோஹன் இயக்குகிறார். 

அயோக்யா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் விஷால் "எனக்கு பணம் தான் முக்கியம்" என்னும் வசனத்துடன்  வலம் வரும் காட்சி இடம் பெற்றது. இந்த வசனம், விஷால் படத்தில் நல்லவரா?கெட்டவரா? என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan