’அயோக்யா’ படத்தின் டிரைலர் வெளியீடு..!!

share on:
Classic

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘சண்டக்கோழி 2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து  விஷால் நடித்துள்ள படம் தான் ‘அயோக்யா’. தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார்.  இந்த படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  

ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் என பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சமீபத்தில் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை மே 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan