இன்னும் எத்தனை உயிரை பறிக்க போகிறதோ இந்த பிளாஸ்டிக்..!

share on:
Classic

அமெரிக்காவின் N.C கடற்கரையருகே 17 அடி நீளமுள்ள குட்டி திமிங்கலம் ஒன்று தொண்டையில் 'பிளாஸ்டிக் பை' மாட்டி கரை ஒதுங்கியது. மிக மோசமமான நிலையில் இருந்த அந்த திமிங்கலம் முதலுதவி அளிக்கப்பட்டும் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கரை ஒதுங்கிய குட்டி திமிங்கலம் 

அமெரிக்க கடற்கரையருகே 17 அடி நீளமுள்ள குட்டி திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.இது அழிந்து வரும் இனத்தை சேர்ந்தது .தொண்டையில் பிளாஸ்டிக் பை மாட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை அடுத்து  அமெரிக்காவின் கரோலினா கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு அமைப்பு அந்த திமிங்கலத்திற்கு முதலுதவி அளித்தது. ஆனால் எவ்வளவோ முயன்றும் அதை காப்பாற்ற முடியவில்லை. அந்த பகுதில் திமிங்கல நடமாட்டமே இல்லாத நிலையில் இது பல மைல் தூரம் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பலனின்றி போன முதலுதவி :

கரை ஒதுங்கும் போதே மிகவும் ஆபத்தான நிலையில் தான் இருந்துள்ளது அந்த திமிங்கலம். தொண்டையில் மாட்டிய பிளாஸ்டிக்கால் உணவு உண்ண முடியாமல், சராசரி திமிங்கலங்களை விடவும் எடை மிக  குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனை முதலில் பார்த்த, வனவிலங்கு புகைப்பட கலைஞர் ராபி ஜான்சன்  மற்றும் அங்கு இருந்தவர்கள் சேர்ந்து வாலிகளில் தண்ணீர் கொண்டு வந்து அதன் மீது ஊற்ற தொடங்கினர். ஆனால் எந்த முதலுதவியம் அந்த திமிங்கலத்தின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

பழிவாங்கிய பிளாஸ்டிக் :

அந்த திமிங்கலம் உடல்கூறு செய்யப்பட்ட போது அதன் வயிற்றில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் தொண்டையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. இதனால் தான் அந்த திமிங்கலத்தால் உணவு எதுவும் எடுத்து கொள்ள முடியாமல் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல நாடுகள் தொடர்ந்து குப்பைகளை கடலில் கொட்டி வருகிறது. பல வருடங்களுக்கு மக்காமல் கிடைக்கும் இந்த அந்த குப்பைகளால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றன. இதற்கு பரிதாபமாக இறந்த இந்த குட்டி திமிங்கலமே சாட்சி.  
 

News Counter: 
100
Loading...

aravind