பிரிட்டன் விமான நிலையத்தில் மீண்டும் பரபரப்பு..

share on:
Classic

பிரட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் வான் எல்லையில் மீண்டும் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு விமான சேவை தடைப்பட்டது.

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது Gatwick பகுதியில் 2 ட்ரோன்கள் பறந்ததை அடுத்து ஆயிரம் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் ட்ரோன்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமான சேவை ஒரு மணி நேரம் தாமதமானதால் பயணிகளிடையே கூச்சல், குழப்பம் நிலவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind