தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும் - மாயாவதி

share on:
Classic

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-க்கு பிறகு பாஜகவிற்கு கெட்ட நாட்கள் தொடங்க உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய மாயாவதி “ மகாகத்பந்தன் கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதரவு பாஜகவை பதற்றமடைய செய்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மே 23-க்கு பிறகு வெளியேற்றப்பட உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவிற்கு கெட்ட நாட்கள் தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தவறான கொள்கைகளினால் அது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. தற்போது பாஜக அதே தவறை செய்வதுடன், ஆர்.எஸ்.எஸ்-ன் தவறான வழிமுறைகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவினரின் காவலர் நாடகம் இம்முறை உதவாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது மட்டும் உறுதி” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya