உலகக்கோப்பை : தொடரும் பெய்ல்ஸ் சர்ச்சை..!

share on:
Classic

பெயில்ஸ் தொடர்பான சர்ச்சை தொடரும் நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பும்ரா வீசிய பந்து பெயிலில் பட்டும் பெயில் கீழே விழவில்லை அதனால் வார்னருக்கு அவுட் மறுக்கப்பட்டது. பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் நேற்றைய ஆடட்த்தில் பும்ரா வீசிய பந்தை வார்னர் எதிர்கொண்டார், அவரின் பேட்டில் பந்து பட்டு ஸ்டெம்பின் அடிப்பகுதியில் உரசியது. ஆனால் பெய்ல் கீழே விழவில்லை அதனால் வார்னருக்கு அவுட் மறுக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி ”பந்து பெயிலில் பட்டும் பெயில் கீழே விழாதது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது முதல் முறை அல்ல 5-வது முறை அதனால் இந்த குறைபாட்டை விரைவில் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்” என கூறினார்.     

இந்த உலகக்கோப்பையில் இதற்கு முன் நடந்த பெயில் சர்ச்சை மொமெண்ட்:
 
1.  இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியுடன் மோதுய ஆட்டத்தில் அடில் ரஷீத், குயின்டன் டீ காக்குக்கு பந்து வீசிய போது பந்து ஸ்டெம்பில் பட்டு எல்.இ.டி விளக்குகள் மின்னியது. ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை அந்த பந்து பவுன்டரிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

2. இலங்கை,நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் பௌலர் டிரென்ட் போல்ட் இலங்கையின் பேட்ஸ்மேன் கருணாரத்னேவுக்கு பந்து வீசினார். பந்து ஆஃப் ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல்ஸ் கீழே விழாத காரணத்தால் கருணாரத்னே தனது ஆட்டத்தை தொடர்ந்து 52 ரன்கள் எடுத்தார்.

3. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில் கிறிஸ் கெய்லுக்கு ஸ்டார்க் பந்து வீசினார். ஸ்டெம்பில் பந்து லேசாக உரசி சென்றது. ஆனால் பெயில்ஸ் கீழே விழாத காரணத்தால் கிறிஸ் கெய்ல் அவுட்டில் இருந்து தப்பினார்.

 
4. இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சைஃபுதீன் எதிர்கொண்டார், அவரின் உடலில் பந்து பட்டு ஸ்டம்ப் மீது மோதியது. ஆனால் பெயில்ஸ் விழவில்லை. இதனால் சைஃபுத்தீனுக்கு அவுட் வழங்கப்படவில்லை.

5. நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் பும்ரா வீசிய பந்து ஸ்டெம்பில் மோதியது ஆனாலும் பெயில்ஸ் விழாத காரணத்தால் வார்னர் தப்பித்தார்.

 

News Counter: 
100
Loading...

Saravanan