உலகக்கோப்பை : உங்க இஷ்டத்துக்கு மாத்த முடியாது.. கடுப்பான ஐசிசி..!

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டங்களில் ஸ்டெம்பில் பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாமல் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதை மாற்றக்கோரி கோலி, பின்ச் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

உலகக்கோப்பை ஆட்டத்தில் பந்து ஸ்டெம்ப் மீது பட்டும் பெயில்ஸ் கீழே விழாமல் இருப்பதால் அதை மாற்ற கோரி இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் ஆகியோர் ஐசிசியிடம் முறையிட்டனர். இதுவரை நடந்த லீக் ஆட்டங்களில் 5 முறை இது போல் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா மோதிய ஆட்டத்தில் பும்ரா வீசிய பந்து ஸ்டெம்பில் மோதியது ஆனாலும் பெயில்ஸ் விழாத காரணத்தால் வார்னர் தப்பித்தார். உலகக்கோப்பை பாதி ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இப்பொழுது பெயில்ஸ் மாற்றினால் ஆட்டத்தின் நம்பகத்தன்மையை சீர்குழைக்கும். எனவே நீங்கள் கேட்பது போல மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என ஐசிசி மறுத்து விட்டது. எல் இ டி பொருத்தப்பட்ட பெயில்ஸ் 2015 முதல் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

 

News Counter: 
100
Loading...

Saravanan