பஜாஜ் ஃபின்சர்வின் மருத்துவ லோன்கள் : ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வழங்கப்படும் !!

share on:
Classic

மருத்துவர்களின் நிதித் தேவைகளுக்காக பிரத்யேகமாக மருத்துவ லோன்கள் வழங்கப்படும் என்று பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) அறிவித்துள்ளது.

பஜாஜ் பின்சர்வ் தொழிற்கடன் மருத்துவ துறைக்கு உதவும் வகையில் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. புதிய மருத்துவமனைகளுக்கான படுக்கைகள், மருத்துவமனையை மேம்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றிற்காக ரூ. 30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும் மருத்துவர்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து ரூ. 2 கோடி வரை கடன் பெறலாம். மேலும் பஜாஜின் ஃபளக்சி லோன் (Flexi loan)மூலம் அனுமதிக்கப்பட்ட மொத்த கடனில் உங்களுக்கு தேவையான பணத்தை பகுதியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், மீதமுள்ள பணத்தை உங்களுக்கு தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வாங்கிய பணத்திற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது. 

கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தும் இ.எம்.ஐ வசதி முறையும் உள்ளது, இதனால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் போது கடனுக்கான அசல் தொகையை செலுத்தும் வசதியும் இந்த ஃபளக்சி லோன் மூலம் கிடைக்கிறது. கடனுக்கு விண்ணபித்து அது ஒப்பதல் ஆன 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya