தண்டனைக்கு தடைகோரும் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு

share on:
Classic

சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி பார்த்திபன், தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் பிற்பகல் தீர்ப்பளிப்பதாக அறிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரி பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உடனடியாக ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் 3 ஆண்டு சிறை தண்டனையை தடுக்க சொன்னால் சரி, தீர்ப்பையே ஏன் தடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காவல் ஆய்வாளரை திட்டியதால் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலரே சாட்சி அளித்துள்ளதாகவும் தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், ”வாகனத்தை தாக்கியதாகவோ, எரித்ததாகவோ என் மீது வழக்கு இல்லை” என பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி, அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கைச் எடுத்துச் செல்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தகுதி இழப்பிற்கு ஆளாவீர்கள் என்பதால் நேரடி தீர்ப்பை தடை செய்ய கோருகிறீர்களா எனவும் சரமாரி கேள்விகளை முன்வைத்தனர்.

இதனிடையே, பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அதனைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறு என சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகல் தீர்ப்பு வழக்கப்படும் என நீதிபதி பார்த்திபன் அறிவித்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth