அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி

share on:
Classic

சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1998 ஆம் ஆண்டு கள்ளச்சாராயத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் அரசு வாகனங்கள் சேதப்படுத்தியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. 

இதனையடுத்து அவர் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அதற்கான கடிதத்தையும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind