தமிழகத்தில் மீதம் உள்ள 20 சதவீத பிளாஸ்டிக்கிற்கும் விரைவில் தடை - அமைச்சர் கே.சி.கருப்பணன்

share on:
Classic

தமிழகத்தில் மீதம் உள்ள 20 சதவீத பிளாஸ்டிக் பொருட்களும் விரைவில் தடை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மீதம் உள்ள 20 சதவீத பிளாஸ்டிக்  பொருட்களை தடை செய்வதற்கான புதிய அரசாணை தயாராகி வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு மக்களிடையே பெரிய ஆதரவு உள்ளதாகக் கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind