நீண்டு வரும் நெட்ஃப்ளிக்ஸ் சர்ச்சைகள்..!

share on:
Classic

உள்நாட்டில் துவங்கி, உலக நாடுகள் வரை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.  அந்த வரிசையில் தற்போது,  இந்தியாவில் புதியதோர் சர்ச்சையில் சிக்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் வழக்கங்களை தவிர்த்து, ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் படம் பார்க்கும் முறை,  தற்போது உலக அளவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில்  அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ 5,  போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் வெற்றிகரமாக வலம் வர , புதியதாக உலக சினிமாக்களின் பெரும் பங்கினை தன் வசம் கொண்டுள்ள,  டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களும் இந்த துறையில்,  கால் பதிப்பதற்கான பணிகளை மும்முரபடுத்தியுள்ளன.

 

இவற்றில் வெளியிடப்பட்ட திரைப்படங்களும், வெப் சீரியஸ்களும்,  எதிர்பார்த்த அளவை காட்டிலும் பெரிய வரவேற்பை பெற்றதன் மூலம், தொடர்ந்து இவற்றில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றிற்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக,  பல முன்னனி சினிமா நட்சத்திரங்களும் இதில் நடிக்க துவங்கினர். இதன் காரணமாக அனைத்து தரப்பு பயனாளர்களும், இதனை நாட துவங்கினர். 

இதன் காரணமாக உலக அளவில், இந்த ஸ்ட்ரீமிங் தளங்கள் வேகமாக வளர்ச்சி பெற துவங்கின. அதையடுத்து பொழுதுபோக்குகளையும் கடந்து, பல சமூக பிரச்சனைகள் சார்ந்த திரைப்படங்களும் இங்கு வெளிவர துவங்கி, பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இதில் வெளியான சில திரைப்படங்கள் பல சர்ச்சைகளை கிளப்பியதோடு, பலத்த எதிர்ப்புகளையும் பெற்றது. அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தொடர்களும், திரைப்படங்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்க துவங்கின. அதில் வெளியான  13 reasons why, big mouth, blue is the warmest color, உள்ளிட்ட பல தொடர்கள், சில ஏற்ற்கொள்ள முடியாத  பாலியல் ரீதியான சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக பல சர்ச்சைகள் கிளம்பியதோடு, நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவிக்க துவங்கினர். 

இந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான Insatiable என்ற தொடரும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள், உணவு கட்டுப்பாடு மற்றும்  பெண்களின் உடல் அமைப்புகளை இழிவுப்படுத்தும் வகையில்,  சித்தரிக்கப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடரை ரத்து செய்யக் கோரி சுமார் 2,29,400 பேர் புகார் மனு அளித்திருந்தனர். இப்படி உலக அளவில் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நெட்ஃப்ளிக்ஸ்,  தற்போது இந்தியாவில் மத ரீதியிலான  ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. பொதுவாகவே தற்போது வெளியாகும் பல திரைப்படங்கள், சமூக கருத்துக்களையும், மத ரீதியிலான சம்பவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதால், சர்ச்சைகளில் சிக்குவது  தொடர்கதையாகி உள்ளது. 

இதற்கு உதாரணமாக  ஆர்டிகள் 15, லுக்கா சிப்பி, மெர்சல், பத்மாவத் என பல படங்கள் உள்ளன. நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் இதே நிலை தான். இதில் வெளியாகும் படங்களும், வெப் சீரியஸ்களும்  தொடர்ந்து மத ரீதியிலான கருத்துக்களை பேசுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதில் லைலா, லவ் பெர் ஸ்கொயர் ஃபூட், Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என பட்டியல்  நீள்கிறது. 

இதன் காரணமாக  பல இந்து அமைப்புகளும்  நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இதனை தடுக்க  வேண்டுமானால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கும் தணிக்கை என்பது கட்டாயபடுத்த வேண்டும் என, சிலர் உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் தடை செய்யப்பட வேண்டும் என, சிவசேன தெரிவித்த கருத்தினை ஆதரித்து, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸை தடை செய்ய வேண்டும் என கூறிய கருத்தை ஆதரித்து, பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Saravanan