சூறை காற்றால் வேரோடு சாய்ந்த வாழை மரங்கள்..விவசாயிகள் கவலை..!

share on:
Classic

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமாகின.

ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை, தும்பிபாடி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று காரணமாக புழுதி கிளம்பியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே மேச்சேரி பகுதியில் மின்னல் தாக்கியதில், 4 பேர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த பலத்த சூறைக்காற்றின் வேகம் தாங்காமல், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan