தொடர் தோல்வியில் இருந்து மீளாத ஆப்கானிஸ்தான் அணி..!

share on:
Classic

பங்களாதேஷ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..

உலகக்கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்னிலும், தமீம் இக்பால் 36 ரன்னிலும் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் வந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்களை அடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்து பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களும், ஷாகிப் 51 ரன்களும் குவித்தனர்.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குல்படின் நாயப், ரஹ்மத் ஷா களமிறங்கினர். ரஹ்மத் ஷா 24 ரன்களில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். தொடக்க ஆட்டக்காரர் 47 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி அணிக்கு பேரதிர்ச்சி அளித்தனர். அணியின் சாமியுல்லா ஷின்வாரி தனி ஒருவனாக நின்று ஆட்டத்தின் இறுதி வரை நிலைத்து ஆடி 49 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டும் சேர்த்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது.

News Counter: 
100
Loading...

Saravanan