திருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..

share on:
Classic

குஜராத்தில் உள்ள தக்கார் சமூக மக்கள் திருமணமாக பெண்கள் மொபைல் போன்கள் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் தக்கார் சமூக மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். அச்சமூகத்தின் ஆலோசனை மூத்த உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. அதில் கலப்பு திருமணங்களை தவிர்ப்பதற்காக திருமணமாகாத பெண்கள் செல் போன்கள் வைத்திருக்க கூடாது என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. மேலும் திருமணமாக பெண்களிடம் போன் இருந்தால் அதற்கு அவர்களின் பெற்றோரே பொறுப்பு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகள் சாதி கலப்பு திருமணங்களை செய்ய நேர்ந்தால் அவர்களின் பெற்றோருக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த சமூகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பெண்களை மொபைல் போன்கள் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும் என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர்கள் தெரிவித்தனர். போன்களில் வீடியோக்கள் எடுப்பது போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பது தடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முடிவை அப்பகுதி எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கரும் வரவேற்றுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya