மாணவர்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் பெருமிதம்

share on:
Classic

இன்றைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சிறந்து விளங்குவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். 

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வர்த்தக கருத்தரங்கை துவக்கி வைத்தபின் விழாவில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்தியா, உயர்கல்வியில் 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 42,000கல்லூரிகளுடன் உலகளவில் சிறந்துவிளங்குவதாகக் குறிப்பிட்டார். 

பள்ளிக்காலத்தில் 67 சதவிகித மதிப்பெண்கள் வாங்கிய போது தனக்கு கிடைத்த பாராட்டுகள், இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்று பேசிய அவர், கல்வித்துறையில் பெண்கள் தான் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind