நான் அவனில்லை : 'பார்' நாகராஜ் விளக்கம்..!

share on:
Classic

பொள்ளாச்சி ஆபாச வீடியோவில் இருப்பது, தான் இல்லை என 'பார்' நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்பின் வெளியான வீடியோ ஒன்றில் பெண்களை பாலியல் கொடுமை செய்யும் கும்பலில் பார் நாகராஜ் இருந்ததாக தெரிய வந்தது. இதனால் சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பார் நாகராஜனை பாலியல் வழக்கில் கைது செய்ய வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தற்போது ”பொள்ளாச்சி ஆபாச வீடியோவில் இருப்பது, நான் இல்லை” என விளக்கமளித்து 'பார்' நாகராஜ் விடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். புகார் அளித்த பெண்ணின் சகோதரனை மிரட்டிய வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ததாகவும், ஆபாச வீடியோவில் இருப்பது, கைதான சதீஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan