ஐரோப்பா சேம்பியன்ஸ் லீக் : அரையிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனா..!

share on:
Classic

ஐரோப்பா சேம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மேன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

யு.யி.எப்.ஏ (U.E.F.A)என்றழைக்கப்படும் ஐரோப்பா சேம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஸ்பெயின் நகரின் கேம்ப் நோவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா அணியுடன் மேன்செஸ்டர் யுனைடட் அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்ஸி 16 மற்றும் 20வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து அசத்தினார்.

சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணி 61 வது நிமிடத்தில் 3வது கோலை அடித்தது. ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மேன்சென்ஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

 

News Counter: 
100
Loading...

aravind