ராணுவ முத்திரை பதித்த கையுறையை தோனி பயன்படுத்த பிசிசிஐ வலியுறுத்தல்..!

share on:
Classic

தோனியின் கையுறையில் உள்ள முத்திரையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியில், இந்திய துணை ராணுவ படையின் முத்திரை பதித்த கையுறையை தோனி பயன்படுத்தினார். ஐசிசி விதிகளின்படி அரசியல், சமயம், இனவாதம் மற்றும் தேசியவாத குறித்த முத்திரைகளையோ, குறியீடுகளையோ பயன்படுத்த அனுமதி இல்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இந்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என பிசிசிஐக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த முத்திரையை தோனி தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளதாக பி.சி.சி.ஐ. நிர்வாக குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan