பெண்கள் குறித்து தவறாக பேசிய ஹர்திக் பாண்ட்யா, கே. எல். ராகுல்..! ரூ. 20 லட்சம் அபராதம் விதிப்பு..!

share on:
Classic

பெண்கள் குறித்து தவறாக பேசிய இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே. எல். ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தனியார் தொலைகாட்சியில் இயக்குநர் கரண்ஜோஹர் நடத்தி வரும் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே. எல். ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பெண்கள் குறித்து இருவரும் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே. எல். ராகுல் ஆகியோர் மன்னிப்பு கோரியதை அடுத்து அவர்களுக்கு விளையாட அனுமதி அளித்தது. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தவிட்டுள்ளது. மேலும், இந்த அபராத தொகையை, உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் அளிக்க வேண்டும் எனவும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக மீதமுள்ள ரூ. 10 லட்சம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை 4 வார அவகாசத்திற்குள் செலுத்தாவிடில், அவர்களுக்கு வழங்கும் போட்டிக்கான சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan