அழகான பாதங்களுக்கு அருமையான அசத்தல் டிப்ஸ் !

share on:
Classic

பெண்கள் பொதுவாக முக அழகை மட்டுமே அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அன்றாடம் ஓடி ஓடி ஓய்வறியாமல் கலைத்துப் போன பாதங்களையும், கால்களையும் கண்டு கொள்ள கடுகளவு நேரம் ஒதுக்கக் கூட சிந்திக்காமல் செயல் படுகின்றனர்.

விளைவு: பாதங்களில் வெடிப்பு, விரல் இடுக்குகளில் சேற்றுப்புண், நகங்களில் சொத்தை, என பின்னாளில் வந்த பின்னர் வருத்தப்பட்டு என்ன பயன். கால்களுக்கு விதவிதமான கொலுசு போட்டால் மட்டும் போதுமா என்ன ? கால்களை என்றும் அழகாக வைக்க சில எளிய விஷயங்களையும் செய்து கொள்ள வேண்டும். 

வெடிப்பு: வேலை செய்யும் பெண்கள், கல்லூரிக்கு செல்வோர், வீட்டில் இருக்கும் மகாராணிகள் என பலரும் பல இடங்களுக்கு செல்கின்றோம். அவ்விதம் செல்லும் போதும் நமது கால்களில் தூசு, அழுக்கு படியும். வெப்பம் அதிகரித்து கால் பாதங்கள் நாளடைவில் வெடிப்பு வந்து காலின் அழகினை கெடுக்கும். 

தீர்வு : நமது கால்களை விடும் அளவிற்கு அகன்ற பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் வேண்டும். அதனுடன் சிறிது உப்பு போட்டு தலை அலச பயன்படும் ஷாம்பூவை அதில் சிறுது ஊற்ற வேண்டும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை அதில் வைக்க வேண்டும்.

10 நிமிடங்கள் வைத்த பின்னர், தேவை இல்லாத பயன்படாத ப்ரெஷ் வீட்டில் இருந்தால் அதனை பயன்படுத்தி நன்கு காலினை தேய்க்க வேண்டும். புதியது ( ப்ரெஷ் ) வாங்கி தேய்த்தாலும் நன்றே. தற்போது கடைகளில் பியூமிஸ் ஸ்டோன் என கல் கிடைக்கின்றது. இது பார்ப்பதற்கு மற்றும் பயன்படுத்தவும் சற்று சொறப்பாக இருக்கும்.

அவற்றை வாங்கி பாதங்களை நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். பின்பு கால்களை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்து மசாஜ் செய்து வர வேண்டும். இது போல் தொடர்ந்து கால்களை பராமரித்து வந்தால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு சரி ஆகும்.  

News Counter: 
100
Loading...

sankaravadivu