கண்களின் அழகை கெடுக்கும் கருவளையம்.. நீங்க எளிய டிப்ஸ் !

share on:
Classic

பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் ஏற்படும் டென்ஷன் தரக்கூடிய பிரச்சனை என்றால் அது கருவளையம். 

அவற்றை  நீக்க எளிய டிப்ஸ் : 

  • தக்காளி சாறு சருமத்திற்கு மிகவும் உகந்தது. தக்காளி சாற்றினை கண்களில் கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்கும். 
  • எலுமிச்சை சாரும் உகந்தது. அதனையும் கருவளையம் போக்க பயன்படுத்தலாம். 
  • இரவு படுகைக்குச்செல்லும் முன் வைட்டமின் ஈ நிறைந்த க்ரீம்களை தடவி வர கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் அகலும். 
  • பாலுடன் சர்க்கரை சேர்த்து கண்களின் அடியில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையங்கள் அகலும். 
  • இரவு நேரம் உறங்காமல் மொபைல் போனை பார்த்துக்கொண்டு வாட்ஸ் ஆப் நோண்டுவது, மீம்ஸ் பார்ப்பது , நண்பர்களிடம் சேட் செய்தல் , 
  • அதிக பொழுது ஆன்லைனில் செலவிடுவது கண்களின் அழகை கெடுக்கும். அதிக நேரம் மொபைல் பார்ப்பதனால் மொபைலில் இருந்து வரும் கதிர்கள் கண்களை பாதிக்கும். அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்ப்பது கண்களுக்கு நல்லது. 
  • உடலில் அதிகம் வெப்பம் இருந்தாலும் கண்கள் கருப்பாக காணப்படும். இதற்கு உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் நிரந்தர தீர்வாக அமையும். உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இரண்டையும் அரைத்து சாறு எடுத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
  • கண்களில் கருவளையம் ஏற்பட்டால் அதனை நினைத்து கவலை கொள்ளாமல் சரி செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.  மனதை கவலை இல்லாமல் கூலாக வைத்துக்கொண்டால் முகம் பொலிவு பெரும். அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
  • தயிர், கஸ்தூரி மஞ்சள் , தூய சந்தனம் கண்களின் அடியில் தடவி வர கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
News Counter: 
100
Loading...

sankaravadivu