வாக்குப்பதிவு இயந்திர கோளாறு : நீண்ட நேர காத்திருப்புக்கு பின் வாக்களித்த கமல்ஹாசன்..!!

share on:
Classic

நீண்ட நேர காத்திருப்புக்கு பின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். 

சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தன்னுடைய வாக்கை செலுத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்றார். அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தார். வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக அங்கு வாக்குப்பதிவு சிறிது தாமதம் ஏற்பட்டது. காலை 7.20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக நீண்ட நேர காத்திருப்புக்கு பின் காலை 8.40 மணியளவில் கமல்ஹாசனும், ஸ்ருதி ஹாசனும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் என் கடமையை செய்துவிட்டேன், மக்களும் அவர்களுடைய கடமையை செய்யட்டும்” என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya