ஜூன் 8 நடைபெற இருந்த பி.எட் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம்..!

share on:
Classic

ஜூன் 8-ஆம் நடைபெற இருந்த பி.எட் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை தேர்வுகள் மே 29-ம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி பல்கலைக்கழக தேர்வும், ஆசிரியர் தகுதி தேர்வும் ஒரே நாளில் நடைபெறும் சூழல் இருந்ததால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். இதுதொடர்பாக. மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஜூன் 8-ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வு ஜூன் 13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan