சரும அழகை அதிகரிக்கும் பீட்ரூட் பேஸ்மாஸ்க்..!!

share on:
Classic

பீட்ரூட்டை நாம் சமைப்பதற்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தியுள்ளோம். இந்த பீட்ரூட்டை வைத்து பேஸ்மாஸ்க் செய்து முகத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதால் முகத்தில் அதிக பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் இருந்துவிட்டால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முகத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே பீட்ரூட் பேஸ்மாஸ்க் செய்து முகத்தில் பூசுவதால் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

பீட்ரூட் பேஸ்மாஸ்க் செய்யும் முறைகளை பார்ப்போம் :

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:
கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் தயிர், எலுமிச்சை சாறு பீட்ரூட் சாறு சேர்த்து பேஸ்ட் பதம் வரும்வரை நன்கு கலந்து கொள்ளவும். பின்பு இதை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முகத்தில் இந்த கலவையை தடவும் போது கீழ் இருந்து மேலாக அப்ளை செய்ய வேண்டும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan